27 அக்டோபர் 2009
கட்டாரிலிருந்து.....கட்டிய மனைவிக்கு!
கண்மணி உன்னைவிட்டு
பொன்மணியத் தேடிக்கிட்டு
நாடு விட்டு நாடு வந்தேன்
நல்ல தொழில் செய்ய என்று
ஏஜெண்டுத்துரை சொன்ன
நயமான வார்த்தை நம்பி
நாடு விட்டு இங்கு வந்தேன்
நாலுபணம் சேர்க்கவென்று
பாடுபட்டு உழைச்சிடலாம்
பட்டகடன் தீர்த்திடலாம்
வீடுகட்டி வாழ்ந்திடலாம்
விரும்பியத வாங்கிடலாம்
என்று நான் கனவு கண்டே என்
நாட்டைவிட்டு இங்கு வந்தேன்
கண்டம் விட்டு கண்டம் வந்து
கண்ட புதுமையெண்டா
நாய் செய்யா வேலையெல்லாம்
நான் செய்தேன் கேளு புள்ள
வந்து ஒரு வருசமில்ல
பட்டகடன் தீரவில்ல
வேல செய்த கம்பனிய
மூடப்போறான் என்றறிந்து
பாய்ந்து நான் வேல செய்தன்
பரவால்ல சம்பளமும்
ஒரு மாசமாகவில்ல
தள்ளிவிட்டான் ஜெயிலுக்குள்ள
இருமாசத்தால் வருவன்
அங்க வந்து தொழில் செய்ய
ஆனமுதல் ஏதுமில்ல
எடுடி புள்ள லோண் ஏதும்
தொழில் செய்து கடன் கட்ட!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 கருத்துகள்:
//அங்க வந்து தொழில் செய்ய
ஆனமுதல் ஏதுமில்ல
எடுடி புள்ள லோண் ஏதும்
தொழில் செய்து கடன் கட்ட!//
மகளிர் சுயஉதவிக்குழுவிலா?
உங்களின் சிந்தனைக் கவிதை நன்றாயிருக்கு நண்பரே. அதே சமயத்தில் உண்மையாகவும் இப்படி எங்கோ ஓரிடத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
//க.பாலாசி கூறியது...
//அங்க வந்து தொழில் செய்ய
ஆனமுதல் ஏதுமில்ல
எடுடி புள்ள லோண் ஏதும்
தொழில் செய்து கடன் கட்ட!//
மகளிர் சுயஉதவிக்குழுவிலா?
உங்களின் சிந்தனைக் கவிதை நன்றாயிருக்கு நண்பரே. அதே சமயத்தில் உண்மையாகவும் இப்படி எங்கோ ஓரிடத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.//
மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயற்பாடு இந்தியாவில்தான் நல்ல முன்னேற்றமாக உள்ளதாக அறிகிறேன் நண்பரே! அதுபோல் இங்குமிருந்தால் கடன் எடுப்பது சுலபம்தான்!
நன்றி நண்பரே நன்றி!
நல்ல சிந்தனைக் கவிதை
Nalla Kavithai Thanikash,you have pointed out what is happening.
நல்ல இடுகை நண்பரே........கவிதை அருமை....
தணிகாஷ்,அருமை.இயல்நடையில் கவிதையாய் ஒரு கதை.
நல்லாயிருக்கு.
//பிளாகர் தியாவின் பேனா கூறியது...
நல்ல சிந்தனைக் கவிதை//
நன்றி தியா நன்றி!
//Muniappan Pakkangal கூறியது...
Nalla Kavithai Thanikash,you have pointed out what is happening//
அப்படியா நன்றி நண்பரே! மீண்டும் வாருங்கள்!
//புலவன் புலிகேசி கூறியது...
நல்ல இடுகை நண்பரே........கவிதை அருமை....//
நன்றி நண்பரே! உங்கள் கருத்துக்களே வலிமை சேர்க்கிறது!
//பிளாகர் ஹேமா கூறியது...
தணிகாஷ்,அருமை.இயல்நடையில் கவிதையாய் ஒரு கதை.
நல்லாயிருக்கு//
நன்றி நட்பே! உள்ளதைச் சொல்லுங்கள்!
நல்லதோ கெட்டதோ எதுவாகிலும். திருத்திகொள்ள உதவும்!
கருத்துரையிடுக