10 நவம்பர் 2009
உண்மைக்காதல்!
மாடி வீட்டு முற்றத்துல
கூடிருந்து ஆடயில சின்னத்தான்- நீ
முத்தமிட்டுச் சொன்ன கத என்னத்தான் -எனை
முத்தமிட்டுச் சொன்ன கத என்னத்தான்?
போடி போடி புள்ள நீ
போன கத சொல்வதிங்கு ஏனிப்போ? -எப்போ
போன கத சொல்வதிங்கு ஏனிப்போ?
கோடி கோடியாய் உழைத்து
கோடீஷ்வரன் ஆனபின்பு
தேடி என்னை மணம் புரிவேன்
என்று சொன்னியே -இப்போ
போடி போடி என்று நீ விரட்டுறியே?
சின்ன வயசில நான்
சிந்திக்காம சொன்னதெல்லாம்
உண்மையாக உன்மனதில் வச்சிருக்கியா -புள்ள
உண்மையாக உன்மனதில் வச்சிருக்கியா?
எதற்காக என்னக் கட்டத் தயங்குறீங்க?
என்ன குறைச்சலென்று சொல்லுவீங்களா?- எனக்கு
என்ன குறைச்சலென்று சொல்லுவீங்களா?
கறையொன்றும் இல்ல கண்ணே உன்னிடத்திலே
குறையெல்லாம் இருக்கிறது என்னிடத்திலே-பெரிய
குறையெல்லாம் இருக்கிறது என்னிடத்திலே
குறையொன்றும் இல்லை அத்தான் உன்னிடத்திலே- பெரிய
குறையொன்றும் இல்லை அத்தான் உன்னிடத்திலே
பணக்கார பெண்ணென்று விலக்குறீங்க- உங்க
குணம் மட்டும் எனக்கென்றும் போதுமையா
உன்னவிட்டு நான் என்றும் பிரியேனடி -உங்க
அப்பனுக்கும் சதி செய்ய நினையேனடி
வாடி கண்ணே ஆசீர்வாதம் பெற்றுக்குவோம்
வாழ்த்தி அத்தை வரம் கொடுத்தா வாழ்ந்துக்குவோம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
தணிகாஷ்,கிராமத்து இசையா இல்லை கும்மியா எனக்குத் தெரியவில்லை.ஆனா நல்லாயிருக்கு.
//வாடி கண்ணே ஆசீர்வாதம் பெற்றுக்குவோம்
வாழ்த்தி அத்தை வரம் கொடுத்தா வாழ்ந்துக்குவோம்! //
அனுபவம்,
எங்க ஊருல எவன் சாமி ஆசீர்வதிக்கிறான். தெரிஞ்சிட்டாலா வதைக்குறான். பாட்டு நல்லாருக்கு.
// ஹேமா கூறியது...
தணிகாஷ்,கிராமத்து இசையா இல்லை கும்மியா எனக்குத் தெரியவில்லை.ஆனா நல்லாயிருக்கு//
கும்மி இல்லை ஹேமா!கிராமத்து இசையாகவே எடுத்துக்கலாம்.
கருத்துரைக்கு நன்றி ஹேமா!
// சத்ரியன் கூறியது...
//வாடி கண்ணே ஆசீர்வாதம் பெற்றுக்குவோம்
வாழ்த்தி அத்தை வரம் கொடுத்தா வாழ்ந்துக்குவோம்! //
அனுபவம்,
எங்க ஊருல எவன் சாமி ஆசீர்வதிக்கிறான். தெரிஞ்சிட்டாலா வதைக்குறான். பாட்டு நல்லாருக்கு.//
உண்மைதான் சத்திரியன்! இந்தக்காலத்துல எதிர்பார்க்க முடியாததுதான்!
நன்றி நண்பர் சத்திரியன் அவர்களே!
கருத்துரையிடுக