28 டிசம்பர் 2009

கவிதை பிறந்த வரலாறு!


கவிதை பிறந்த வரலாறு என்றதும் நீங்கள் ஏதேதோ யோசிப்பது எனக்கு விளங்குகிறது.இங்கு நான் சொல்வது என்னிடம் கவிதை பற்றிய எண்ணம் பிறந்த வரலாறு பற்றித்தான்.நான் தரம் ஏழில் பயின்று கொண்டிருந்தகாலம். காலைக்காட்சிபற்றிய ஒரு வர்ணனை எழுதிக்கொண்டு வரும்படி எங்கள் ஆசிரியை சொல்லியிருந்தார். நான் வழமைபோல எனது தந்தையாரிடம் "ஐடியா" கேட்டுக்கொண்டிருந்தேன்.அவர் தனது வழிகாட்டலுடன் சூரிய உதயம் பற்றிய வர்ணனையை பின்வருமாறு எழுத உதவினார்.

"செண்பகம் மேளம் கொட்ட‌
குயில்கள் பாட்டிசைக்க‌

சேவல்கள் வாழ்த்துக்கூற‌

காகங்கள் வருக வருக என்றழைக்க‌

குருவிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ய

தாமரைகள் தமது நண்பன் வருகையைக் கண்டு முகமலர‌

ஏழு வர்ணப்புரவிகள் பூட்டிய

தேரில்செங்கதிரோன் உதயமானான்


இந்த வரிகளுடனான அந்தக்கட்டுரை ஆசிரியையின் பாராட்டைப் பெற்றது.அதன் பின்னர் எழுதப்போகும் கட்டுரைகளில் கவிவரிகளைச்சேர்ப்பது என்று உத்தேசித்துக்கொண்டேன்.

அடுத்து எங்களுக்கு ஆசிரியை எழுதச்சொன்ன கட்டுரை "மழையற்று வரண்டுபோன ஒரு பிரதேசம்" பற்றிய வர்ணனைக்கட்டுரை. அதில் நான் சுயமாக எழுதிய கவிவரிகள்( அப்போதைக்கு என்மட்டில் கவிவரிகள்) கீழேயுள்ள வரிகள். அவை எனது தந்தையார் மற்றும் ஆசிரியை ஆகியோரது பாராட்டுக்களைப் பெற்றவை.


"கையில் குடம்

கக்கத்திற் பிள்ளை

பையில் ஒருபிடி அன்னம்

பக்கத்தில் நீரல்ல‌

கைலைக்குப் போவதுபோல்

கக்கிசங்கள் பலபட்டு

ஐயையோ என்று

நீர் தேடும் அலைச்சல் தொடர்கிறது"


இந்த வரிகளுக்கான ஆதரவுதான் கவிதை என்று எண்ணிக்கொண்டு நான் ஏதேதோவெல்லாம் எழுதக்காரணமாயிற்று. இதுதான் உண்மை! என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்!

6 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அப்போவே தண்ணீர் பற்றாக்குறையா?

ஹேமா சொன்னது…

தணிகாஷ் எங்க கனநாளாக் காணேல்ல.சுகம்தானே !
ஊர் வாசம் கொண்டு வந்தீங்களா !

சின்னக் கைபிடிச்சு "அ" எழுதினதுமாதிரி உங்கட கவிதையின் ஆரம்பமே அசத்தல்.வாழ்த்துக்கள்.

அனுபவம் சொன்னது…

//
பிரியமுடன்...வசந்த் கூறியது...
அப்போவே தண்ணீர் பற்றாக்குறையா//



ஆமாம் வ‌ச‌ந். தண்ணீருக்கு அதவிட இன்னும் பற்றாக்குறை வரப்போகுதாம், அத்ற்காக என்னோட‌ குரு ஒருத்த‌ர் இப்ப‌வே 2 வாளி த‌ண்ணிதான் குளிக்கிறாரு. அதும‌ட்டுமில்ல‌ நீர‌ சேமிக்கிற‌துக்காக‌ க‌ர‌ண்டியால‌ சாப்பிட‌வும் ப‌ள‌கிட்டாரு. இந்த நள்ளிரவில வந்து கருத்துரத்தைமக்கு நன்றி வசந்த்,

அனுபவம் சொன்னது…

// ஹேமா கூறியது...
தணிகாஷ் எங்க கனநாளாக் காணேல்ல.சுகம்தானே !
ஊர் வாசம் கொண்டு வந்தீங்களா !

சின்னக் கைபிடிச்சு "அ" எழுதினதுமாதிரி உங்கட கவிதையின் ஆரம்பமே அசத்தல்.வாழ்த்துக்கள்.//

ஆமாம் சுகம்தாம்மா ஹேமா , கொஞ்சம் வேலை கொஞ்சம் படிப்பு அதால வரமுடியல்லம்மா. நீங்களும் நள்ளிரவுல வந்து கருத்துரைத்தமைக்கு நன்றிம்மா.வாழ்த்துக்களுக்கும் நன்றி!

thiyaa சொன்னது…

அருமை கிராமிய மானம் கமழுது

பெயரில்லா சொன்னது…

ஆரம்ப காலகட்டத்திலியே அசத்தலோட தான் எழுதியிருக்க தணிகாஷ்..