21 அக்டோபர் 2009

திரு(மதி)புகழ்


அத்தைக்கொருமகள் முத்தை நிகர் கிளி
தத்தத் தனவென நர்த்தனமிடுமயில்
எட்டாதொருமொழி கற்றுப் பயின்றவள் எழிலோத


மெட்டி யணிந்தவர் கடுக்கனணிந்தவர்
கட்டிக்கொளவென காதல் செயவென
சுற்றித்திரிந்தவர் பலபேர்கள்


வெட்டிப்பயலவன் கட்டிக்கொடுத்திடில்
குட்டிப்பெண் மகள் குறைகள் வருமடி
வேண்டாமவனெனச் சொன்னா ரென்மாமன்


அவழுக்கிணையிலை அழகிற் கலைமகள்
மெத்தப்பெருந்தொகை அழகுப்பொருள்கொள
கட்டாதென் தொழில் வருமானம்


பணத்திற் பிறந்தவள் குணத்திற் சிறந்தவள்
பத்துப்பவுணுடன் வேண்டும் ஒருகொடி
கட்டிக்கொள அவள் கழுத்திற்கொரு தாலி


அத்தைக் கென்றும் நானோ பெருமகன்
மகளுக்கென்றும் நானே மருமகன்
மட்டிப் பயலவன் தட்டிச் சென்றிட விடுவேனோ


7 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

//பணத்திற் பிறந்தவள் குணத்திற் சிறந்தவள்
பத்துப்பவுணுடன் வேண்டும் ஒருகொடி
கட்டிக்கொள அவள் கழுத்திற்கொரு தாலி//

மிக நிதர்சனமான வரிகள்....

நல்ல கவிதை.....

அனுபவம் சொன்னது…

நன்றி தோழர் பாலாஜி அவர்களே!

அன்புடன் நான் சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க.

சத்ரியன் சொன்னது…

//அத்தைக் கென்றும் நானோ பெருமகன்
மகளுக்கென்றும் நானே மருமகன்
மட்டிப் பயலவன் தட்டிச் சென்றிட விடுவேனோ//

அதானே, எப்படி விட முடியும். ?

கவிதை நடையும், சொற்களின் படையும் ....அப்பாடி.! எப்படிதான் யோசிக்கிறீங்களோ.

சிறப்பாயிருக்கு.

அனுபவம் சொன்னது…

//சி. கருணாகரசு கூறியது...

கவிதை நல்லாயிருக்குங்க.//

நன்றி! நன்றி நண்பர் கருணாகரசு!
அடிக்கடி வந்து ஊக்கப்படுத்துங்கள்!
-நன்றியுடன் தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

//பிளாகர் சத்ரியன் கூறியது...

//அத்தைக் கென்றும் நானோ பெருமகன்
மகளுக்கென்றும் நானே மருமகன்
மட்டிப் பயலவன் தட்டிச் சென்றிட விடுவேனோ//

அதானே, எப்படி விட முடியும். ?

கவிதை நடையும், சொற்களின் படையும் ....அப்பாடி.! எப்படிதான் யோசிக்கிறீங்களோ.

சிறப்பாயிருக்கு//
ரொம்ப நன்றிங்க!உங்களைப்போல நல்ல நண்பர்களின் ஊக்குவிப்பு இருந்தால் இதெல்லாம் பெரிய விசயமாங்க?
நன்றியுடன் தணிகாஷ்

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

கவிதை super!